வாரத்திற்கு 3 முட்டை சாப்பிடுங்க

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

முழுமையான உணவான முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் A, D, E, K, B12, ஃபோலேட், Lutein மற்றும் Zeaxanthin போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது.

அதனால் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது முட்டையின் சத்துக்களை இழப்பதே ஆகும்.

மேலும், இதில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத Cholin என்ற வைட்டமின் பி சத்தும் உள்ளது.

Cholin மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு Zeaxanthin antioxidant கண் நோய்கள் வராமலும் தடுக்கிறது. முட்டையில் செலினியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல நுண் ஊட்டச்சத்துக்களும் உள்ளது.

முட்டை மருத்துவ ரீதியில் அல்புமினுக்கு பெயர் பெற்றது. ரத்தத்தில் அல்புமின் குறைவாக உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவினை சாப்பிடலாம்.

முக்கியமாக, செயற்கை சிறுநீர் சுத்திகரிப்பு(Dialysis) மற்றும் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்களுக்கு அல்புமின் குறைவாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

முட்டையின் வெள்ளைக்கரு அல்புமின் நிறைந்துள்ளதால் அவர்கள் தாராளமாக வேகவைத்து வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடலாம்.

ஒரு முட்டையில் 212 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இது நமது ஒரு நாளின் தேவைக்கு போதுமானதாக இருக்கிறது.

வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிடுவது அவர்கள் வளர்ச்சியை சீராக்கும்.

முட்டை மஞ்சள் கருவை பிறந்த 6- 7 மாதம் ஆன குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி கொடுக்கலாம். குழந்தை அதை ஏற்றுக்கொண்டால், பின்னர் சிறிது சிறிதாக அதிகப்படுத்தலாம்.

ஏதும் ஒவ்வாமை ஏற்பட்டால் 10 மாதங்களுக்குப் பிறகு கொடுக்க ஆரம்பிக்கலாம். அதன் பிறகு, முழு முட்டையை மிருதுவாக வேகவைத்துக் கொடுக்கலாம்.

கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக வாரத்துக்கு 3 முட்டைகளாவது ஒருவர் சாப்பிடுவது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்