இந்த 2 பொருட்களை அரைத்து 1 டீஸ்பூன் சாப்பிட்டாலே போதும்

Report Print Printha in ஆரோக்கியம்
2136Shares

இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டுமே நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

எனவே இஞ்சி மற்றும் பூண்டை அரைத்து அதில் தினமும் 1 டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே போதும் ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

இஞ்சி, பூண்டு விழுதை, விரைவில் அறுவை சிகிச்சை போன்ற நடக்க இருப்பவர்கள் மட்டும் உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பலன்கள்
  • உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், இஞ்சி, பூண்டு விழுதை சாப்பிட்டால், ரத்த அழுத்த அளவு குறைந்து சமநிலையை அடையும்.
  • செரிமானம் பிரச்சனை, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லைகள், ஒமட்டல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
  • பல் வலி, தலைவலி, தசைகளில் ஏற்படும் வலிகள் போன்றவை ஏற்படும் போது உடனே இஞ்சி, பூண்டு விழுதினை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
  • இஞ்சியில் ஆன்டிபயோடிக் தன்மை உள்ளதால், அது சளி, காய்ச்சல், உடல் வலி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.
  • இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் வயிற்று புண், புற்றுநோய் மற்றும் கட்டிகள் உருவாவதை தடுக்க உதவுகிறது.
  • இஞ்சியில் உள்ள அல்லிசின் ரத்த ஒட்டம் மற்றும் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலமாக ஆண்மையை அதிகரிக்கிறது.
  • நரைமுடி, சரும சுருக்கம் போன்ற வயதான தோற்றத்தை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இருதய பாதிப்புகள் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
  • நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்