எலுமிச்சை சாறு அதிகமாக குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்
280Shares
280Shares
ibctamil.com

பல்வேறு மருத்துவ நலன்களை உள்ளடக்கிய எலுமிச்சை உடல் எடையை குறைக்கும், பித்தத்தைப் போக்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும் தன்மை கொண்டது.

ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போன்று இதனை அதிகமாக குடித்தால் சில பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

எலுமிச்சை சாறு அதிகமாக குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள்

அமிலத்தன்மை அதிகம் இருக்கும் எலுமிச்சை பழத்தின் சாற்றினை நீரில் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அதில் உள்ள அதிகப்படியான அமிலம் நமது பற்களில் உள்ள எனாமலை அரித்து, பற்கள் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

இதனால் வெறும் எலுமிச்சை சாறு மட்டும் குடிக்காமல் தண்ணீர் கலந்து குடிக்கவேண்டும்.

வயிற்றில் புண்கள் இருந்தால் எலுமிச்சை சாறு குடிப்பதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் இவை அமிலத்தன்மை கொண்டவை என்பதால் வயிற்றுப்பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தி புண்களின் வீரியத்தை அதிகரிக்கும்.

gastroesphageal reflux கோளாறுகள் ஏற்படும். அதாவது, நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனைகள் ஆகும்.

எலுமிச்சையில் உள்ள அஸ்கார்பிக் ஆசிட்டானது, நமது சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, நமது உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் சோடியத்தை வெளியேற்றி, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

எலுமிச்சை சாறு குடித்த பின் அதிக தாகம் மற்றும் வறட்சி ஏற்பட்டால், எலுமிச்சை சாற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்