இந்த இலையின் அற்புதம் தெரிந்தால் இனிமேல் தூக்கி போட மாட்டீங்க!

Report Print Printha in ஆரோக்கியம்

கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்கள் மிகுந்தது, அதுவும் கொய்யா இலையில் புரதம், விட்டமின் C, B6, கோலைன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும்,

ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற தன்மைகளையும் கொண்டுள்ளது.

கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்
 • கொய்யா இலையில் டீ செய்து குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் சீராக நடைபெறும்.
 • கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
 • ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரம் அதிகரிக்கும்.
 • கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து குளித்து வந்தால் தலையில் அரிப்பு, பேன் தொல்லைகள் தடுக்கப்படும்.
 • கொய்யா இலையை அரைத்து பேஸ்ட் செய்து கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முடி வெடிப்புகள் வராது.
 • கொய்யா இலையை 20 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பின் அதை தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.
 • கொய்யா இலைகளை சுடுதண்ணீரில் கொதிக்க விட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பை குறைவதோடு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.
 • கொய்யா இலையில் சாறு ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சியை தடுத்து வயிற்று போக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
 • கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்குத் தீர்வளிக்க உதவுகிறது.
 • கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
 • கொய்யா இலையை வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலை டீ செய்து சாப்பிட்டு வந்தால், வாயில் ஏற்படும் பல்வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்