வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து விடுங்கள்! நன்மைகள் ஏராளம்

Report Print Printha in ஆரோக்கியம்

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வர பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

சீரக தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்
  • சீரகத் தண்ணீர் குடிப்பதால் வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுத்து, வயிற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • கர்ப்பிணி பெண்கள் கர்ப்பக் காலத்தில் சீரக நீரை குடித்தால் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி, பால் சுரப்பை ஊக்குவிக்க உதவுகிறது.
  • நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து பல தொற்று நோய்களின் பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து, சுவாசப் பிரச்சனை மற்றும் சளி தொல்லையை குணப்படுத்த உதவுகிறது.
  • சீரகத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி, வளர்சிதை மாற்றத்தை வலுசேர்த்து, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.
  • இரும்புச்சத்து குறைபாட்டை சீர்செய்து, பித்தப்பை மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைத்து, சருமத்தில் பளபளப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது.
  • சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் மற்றும் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும்.
  • சீரக நீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கி முடி உதிர்வை தடுத்து, தலைமுடி வளர்வதற்கு உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers