உணவுக்குடல் புற்றுநோயை தடுக்கும் நீர்: வாரம் ஒருமுறை குடித்தால் போதும்

Report Print Printha in ஆரோக்கியம்

மன அழுத்தம், அதிக வேலைப்பளு போன்ற காரணத்தினால் குடலில் உருவாகும் பாதிப்புகளால் குடல் நோய்கள் அதிகமாகி உணவுக் குடல் புற்றுநோய் கூட ஏற்படும்.

இப்பிரச்சனையை போக்க நெல்லிக்காய், பப்பாளி மற்றும் துளசி ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படும் ஆயுர்வேத மருந்து சிறந்த தீர்வாக உள்ளது.

நெல்லிக்காயில் புற்றுநோய் மருந்து தயாரிப்பது எப்படி?

ஒரு பெரிய நெல்லிக்காயின் சதை பகுதியை நீர் விடாமல் அரைத்து அதில் 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் 1 டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வாரம் ஒருமுறை குடித்து வர வேண்டும்.

துளசியில் புற்றுநோய் மருந்து தயாரிப்பது எப்படி?

ஒருபிடி அளவு வில்வ இலை, துளசி, சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து நீர் விட்டு நன்றாக கழுவி ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி அதை வாரம் ஒருமுறை குடிக்க வேண்டும்.

பப்பாளியில் புற்றுநோய் மருந்து தயாரிப்பது எப்படி?

பப்பாளி விழுது ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதனுடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து, அதனுடன் 1 டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வாரம் இருமுறை குடித்து வர வேண்டும்.

நன்மைகள்
  • நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • நெல்லிக்காய் ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
  • நெல்லிக்காயில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்துக்கள் நம் உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து அகற்றுகிறது.
  • துளசி நீரை குடித்து வந்தால் நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நுரையீரலை சுத்தமாக்க உதவுகிறது.
  • ஈறுகளில் ஏற்படும் பிரச்சனை அல்லது வாய் துர்நாற்றம் போன்ற வாய் தொடர்பான பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
  • தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அது இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
  • துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று குணமாகும்.
  • பப்பாளியில் தயாரிக்கப்படும் பானத்தை குடித்து வர கல்லீரல் மற்றும் குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்