வேர்கடலை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

Report Print Printha in ஆரோக்கியம்

குளிர்காலத்தில் விளையும் வேர்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதால் அதன் முழு சத்துக்களையும் பெறலாம்.

வேர்கடலை உடல் எடையை அதிகரிக்குமா?

ஒரு பிடி வேர்க்கடலை மட்டும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் உடல் எடையை ஆரோக்கியமான் முறையில் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் தினமும் அதிக வேர்க்கடலை சாப்பிடலாம்.

குளிர்காலத்தில் வேர்கடலை சாப்பிடுவதால் என்ன பலன்?
  • வேர்கடலை நம் உடலின் வெப்பத்தை அதிகரிக்க கூடியது. எனவே இதை குளிர்காலத்தில் சாப்பிட்டால், அது நம் உடலுக்கு தேவையான வெதுவெதுப்பு தன்மையை அளிக்கும்.
  • கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்று வலி பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • வேர்கடலை எண்ணெய் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை தருகிறது. இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயத்தை குறைகிறது.
  • வேர்கடலையில் உள்ள சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக்கி நீரிழிவு நோய் வருவதற்கான அபாயத்தை 21% வரை குறைக்க உதவுகிறது.
  • வேர்கடலையில் உள்ள விட்டமின்கள், சரும வறட்சி மற்றும் தோல் சுருக்கங்களை தடுத்து சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.
  • வேர்க்கடலையை தண்ணீரில் 6-8 மணி நேரம் ஊறவைத்து அந்த நீரை வடிகட்டி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • ஆட்டுப் பாலில் எலுமிச்சைச்சாறு பிழிந்து, அதனுடன் ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்