இந்த 2 பொருளை கலந்து வாரம் ஒருநாள் குடியுங்கள்: இவர்கள் குடிக்கக் கூடாது

Report Print Printha in ஆரோக்கியம்

ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டிலும் 1/2 ஸ்பூன் அளவு கலந்து வாரம் ஒருமுறை மட்டும் குடித்து வந்தால் நம் உடலில் பல மாற்றங்கள் நடைபெறும். அவைகள் என்னவென்பதை பார்க்கலாம்.

இந்த கலவையை உணவு சாப்பிடுவதற்கும் 30 நிமிடத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

பலன்கள்
  • மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை குடிக்கும் போது, அது குடல் இயக்கத்தை சீராக்கி, நம் உடம்பில் உள்ள நச்சுக்களை அழித்து சுத்தம் செய்கிறது.
  • உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராகி உடலில் ஏற்படும் சிறு பாதிப்புகளை உடனே குணப்படுத்தி, வெரிகோஸ் நரம்பை தடுக்கிறது.
  • கல்லீரலில் தங்கும் நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் சேர்வதை தடுப்பதோடு, கல்லீரல் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
  • உடலில் அதிகப்படியாக சுரக்கும் அமிலங்களின் சுரப்பை கட்டுப்படுத்தி, வயிற்றினுள் உண்டாகும் அழுத்தத்தை குணமாக்கி வயிற்றுப் பிடிப்பு, வாய்வு, அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்றவற்றை குணமாகும்.
  • ஆலிவ் ஆயிலில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் நம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை சீராக்கி கெட்ட கொழுப்பை குறைக்கும்.
  • மூட்டு இணைப்புகளில் உள்ள சவ்வுகளில் நெகிழ்வுத்தன்மை குறைந்தால் மூட்டு உராய்வு ஏற்பட்டு தேய்மானம் உண்டாகும். இதனை தடுக்க உதவுகிறது.
  • அடிவயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து தங்கி தொப்பையை வராமல் தடுக்கிறது.
  • உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஆர்த்ரைடிஸ், அஜீரணக் கோளாறுகள் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • நகம் சருமம், மற்றும் கூந்தல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தை போக்கி ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
குறிப்பு

பித்தப்பை கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் இதை குடிக்கக் கூடாது. ஏனெனில் அது வயிற்று வலியை உண்டாக்கிவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்