வயிறு இப்படி வீங்கி கொள்கிறதா? தீர்வு இதுதான்

Report Print Printha in ஆரோக்கியம்

வயிற்றில் காற்று உண்டாவது ஜீரணமாகும் போது நடைபெறும் ஒரு இயற்கையான நிகழ்வு. ஆனால் அது வயிற்றில் அதிக வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் போது உடல்நலக் கோளாறுகள் உண்டாகிறது.

வயிற்றில் காற்று உண்டாவது ஏன்?
  • உணவுப் பாதையில் உணவு உடையும் போது, சூயிங்கம் மெல்லுவது. வேகமாக சாப்பிடுவது, குடிப்பது, புகை பிடிப்பது ஆகிய காரணங்களினால் வயிற்றில் அதிக காற்று உருவாகிறது.
  • நம் உடம்பில் சர்க்கரையினை உடைக்க என்ஸைம்கள் இல்லாத போது காற்று உருவாகும்.
  • உருளை கிழங்கு, ஓட்ஸ், பட்டாணி, பழங்கள், சோளம், கோதுமை ஆகிய உணவுகளை சாப்பிடுவதால் அது காற்றினை உருவாக்கலாம்.
  • நார்சத்துக்கள் நம் உடலுக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் அதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது காற்று உருவாகலாம்.
தடுப்பது எப்படி?
  • சூயிங்கம் மெல்லுவது மற்றும் வேகமாக உணவு சாப்பிடுவது, காற்று அடைக்கப்பட்ட பானங்களை குடிப்பது, செயற்கை இனிப்பு உணவுகளை தவிர்ப்பது ஆகிய முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
  • மிகவும் சூடாக பானத்தினை அருந்தாமல் மிதமான சூட்டில் அருந்த வேண்டும்.
  • தினமும் எலுமிச்சை சாறு சேர்த்த நீர் அருந்தவும், அதிக கொழுப்பில்லாத உணவுகளை சாப்பிடவும் வேண்டும்.
  • தினமும் தேவையான அளவு நீர் குடிப்பதும், அடிக்கடி சிறிதளவு உண்பதும், நடைபயிற்சி செய்வதுமாக இருக்க வேண்டும்.
  • மிகவும் இறுக்கமான ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • சாப்பிடும் போது எப்போதுமே நிமிர்ந்து அமர்ந்து கொண்டு சாப்பிட்டால் வயிற்றில் காற்று சேர்வதை தடுக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers