இந்த உணவுகளை இதற்கு மேல் சாப்பிடாதீர்கள்: தீமைகள் இவ்வளவு இருக்காம்

Report Print Printha in ஆரோக்கியம்

மாரடைப்பு போன்ற உடல்நலக் கோளாறுகளை முன்கூட்டியே தடுக்க வேண்டுமெனில், அதற்கு நம் உடலின் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதோடு இல்லாமல் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

புரோட்டீன் சத்துக்கள் நம் உடலிற்கு தேவையென்றாலும் அதில் அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கிறது. அதனால் இதை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளும் போது நம் உடலின் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது.

எனவே பெண்களுக்கு ஒரு நாளில் 46 கிராம் புரோட்டீன்களும், ஆண்களுக்கு 56 கிராம் புரோட்டீன்கள் வரையிலும் தேவைப்படும். இந்த அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் உழைப்பு அதிகம் செய்பவர்கள், கர்பிணிப் பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் புரோட்டீன்களின் சராசரி அளவை விட அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் மூன்று வேளையும் புரோட்டீன் மிக்க உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு உடல்நலக் கோளாறுகளை சந்திக்கக் கூடும்.

புரோட்டீன் உணவுகளை சாப்பிடுவதன் தீமைகள்?
  • புரோட்டீன் உணவுகள் அளவுக்கு அதிகமாகும் போது நம் ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தை பாதிக்கும். கிட்னி கற்கள் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு வலியை உண்டாக்கிவிடும்.
  • நம் உடலில் புரோட்டீன் உணவுகள் அதிகமாக சேரும் போது அவை இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.
  • ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை மற்றும் பாதோஜெனிக் பாக்டீரியாவின் அளவை அதிகரிக்கச் செய்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தூண்டி, புற்றுநோய் வரும் அபாயத்தை ஏற்படுத்திவிடும்.
  • புரோட்டீன் உணவுகளை எடுத்து, ஃபைபர் உணவுகளை தவிர்த்தால், நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் அடையாது. அதனால் செரிமானக் கோளாறு, கேஸ் பிரச்சனைகள் ஏற்படும்.
  • ப்ரோட்டீன் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் நம் உடலில் கெட்ட துர்நாற்றம் மற்றும் வாய் நாற்றத்தினை உண்டாக்கும்.
  • அதிகப்படியான புரோட்டீன் உணவுகள் எடுத்துக் கொள்வதினால் கல்லீரம், மூளையின் செயல்பாடு குறைந்து, நம் உடல் வெப்பநிலை மற்றும் உடல் எடையில் மாற்றங்கள் ஏற்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்