பலாக்காயின் அற்புத நன்மைகள்: சமைக்கும் போது இதை பின்பற்றுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

பலா பிஞ்சு மற்றும் பலா இளம் காய் சிறந்த காய்கறி உணவாக பயன்படுகிறது. அதுவும் அரிசி உணவுக்கு இணையான அளவு மாவுச்சத்து பலாக்காயில் உள்ளதால் பலா மரத்தை அரிசி மரம் என்றும் கூறுவார்கள்.

இந்த பலாக்காயில் உயர்தரமான மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து, விட்டமின் A, B, C, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.

பலாக்காயின் மருத்துவ நன்மைகள்

  • பலாக்காயில் உள்ள ஐக்சுலின் எனும் சத்து, நம் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, நோய் தாக்கத்தின் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.

  • பலாக்காயில் நீரில் கரைய கூடிய பெக்டின் எனும் நார்ச்சத்து உள்ளது, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, உயர் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

  • பலாப்பிஞ்சு நமது உடலிலுள்ள பித்தத்தை நீக்கி, ஆண்களின் ஆண்மைத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

  • தாய்மார்கள் பலாக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.

  • பலாக்காய் நம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. எனவே நம் உடலின் அதிகப்படியான சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்க உதவுகிறது.

பலாக்காயை எப்படி சாப்பிட வேண்டும்?

பலாக்காயை பிஞ்சாக இருக்கும் போது தான் சமையலில் பயன்படுத்த வேண்டும், அதுவும் பலாக்காயை நன்றாக வேகவைத்து அந்த நீரை வடிகட்டிய பின் சமைப்பது நல்லது.

குறிப்பு

அஜீரணம், உடல் பலவீனம் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் உடல்நலக் குறைவினால் நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்கள் இந்த பலாக்காயை சாப்பிடக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்