1 துண்டு காய்ந்த நெல்லிக்காய் போதும்: இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்

Report Print Printha in ஆரோக்கியம்

நெல்லிக்காயை ஜூஸ், பொடி, ஊறுகாய் போன்று எந்த வடிவில் எடுத்தாலும் அதனுடைய பல்வேறு மருத்துவ நன்மைகளை பெறலாம்.

துண்டாக வெட்டி அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அதை வெயிலில் வைத்து சில நாட்கள் உலர்த்திய பின் தினமும் 1 சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

காய்ந்த நெல்லிக்காயின் மருத்துவ நன்மைகள்
  • கர்ப்பக் காலத்தில் ஏற்படும் குமட்டல் பிரச்சனையை போக்க உலர்ந்த நெல்லிக்காயில் ஒரு துண்டு வாயில் போட்டு மெதுவான மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும்.
  • செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கினால் போதும்.
  • நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், உணவு உட்கொண்ட பின் 1 துண்டு உலர்ந்த நெல்லிக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • வயிறு வலிக்கும் போது உலர்ந்த நெல்லிக்காயில் ஒன்று சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்று வலியை குறைக்கும்.
  • வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காய் துண்டை வாயில் போட்டு மென்று வந்தாலே அது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தை போக்கும்.
  • நெல்லிக்காயில் உள்ள விட்டமின் C நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவை வராமல் தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers