கை அளவு வால்நட்ஸில் இத்தனை நன்மைகளா?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
127Shares
127Shares
ibctamil.com

வால்நட்ஸில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், நல்ல கொழுப்புக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்துக்களுடன், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவைகளும் அடங்கியுள்ளன.

அதோடு வால்நட்ஸில் ஏராளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.

சர்க்கரை நோயாளிகள் வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.

வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

ஆகவே ஆண்கள் தினமும் கை அளவு வால்நட்ஸை சாப்பிடுவது நல்லது என்கின்றனர்.

வால்நட்ஸில் வைட்டமின் பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. ஆகவே இதை தினமும் சாப்பிடும் போது, அது சருமத்தில் சுருக்கங்கள் வருவதைத் தடுத்து, ப்ரீ ராடிக்கல்களிடமிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

வாழ்நாளின் அளவை நீட்டிக்க வேண்டுமா? அப்படியெனில் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுங்கள்.

இதுவே உயிரைப் பறிக்கும் பல நோய்களின் அபாயத்தைக் குறைத்து, வாழ்நாளை நீட்டிக்கும்.

கர்ப்பிணிகள் வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு, உணவுகளால் ஏற்படும் அழற்சியையும் குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் வால்நட்ஸ் குழந்தையின் குடல் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

வால்நட்ஸில் உள்ள மெலடோனின் என்னும் பொருள், தூக்கத்தைத் தூண்டும். எனவே தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், வால்நட்ஸை தினமும் சாப்பிட, இரத்தத்தில் மெலடோனின் அளவு அதிகரித்து, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்