இவர்கள் மட்டும் கிராம்பை பயன்படுத்த வேண்டாம்: பக்கவிளைவுகள் இவ்வளவா?

Report Print Printha in ஆரோக்கியம்
788Shares
788Shares
ibctamil.com

உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டது. அதில் ஒன்று தான் கிராம்பு.

ஆனால் இந்த கிராம்பை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் பல தீவிரமான பக்கவிளைவுகளை சந்திக்கக்கூடும்.

யாரெல்லாம் கிராம்பை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது?
  • ரத்தம் தொடர்பான குறைபாடு உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக கிராம்பை உட்கொள்ளக் கூடாது. அதே போல் அறுவை சிகிச்சை செய்து கொள்ள போகிறவர்கள், 2 வாரத்திற்கு முன்பே கிராம்பை சேர்க்கக் கூடாது.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பவர்களும், கிராம்பை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கிராம்பு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்துவிடும்.
  • கிராம்பு அளவுக்கு அதிகமாகும் போது, குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் பிரச்சனை, தொண்டைப் புண், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகள் போன்ற பக்கவிளைவை உண்டாக்கும்.
  • அளவுக்கு அதிகமாக கிராம்பை எடுக்கும் போது, அதனால் பல்வேறு அலர்ஜிகளை சந்திக்க நேரிடும். அதில் அரிப்பு, வீக்கம், தொண்டை கரகரப்பு போன்றவை வரும் வாய்ப்புகளும் உள்ளது.
  • கிராம்பு சிகரெட்டை அடிக்கடி பயன்படுத்தும் போது அதில் இருந்து வரும் புகை சுவாசப் பாதையில் சென்று, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று ஆகியவற்றை ஏற்படுத்திவிடும்.
  • அடிக்கடி உணவில் கிராம்பை அளவுக்கு அதிகமாக சேர்க்கும் போது அது மூளைச் செல்களில் முறையற்ற அதிர்வை ஏற்படுத்தி, வலிப்பு நோயை வரவழைக்கும்.
  • கிராம்பு சருமத்தை மிகவும் சென்சிடிவ் ஆக்கும். எனவே அலர்ஜி இருப்பவர்கள் கிராம்பு எண்ணெயை நேரடியாக சருமத்தில் பயன்படுத்த கூடாது. ஏனெனில் அரிப்பு, எரிச்சல், காயங்களை உண்டாக்கிவிடும்.
  • அளவுக்கு அதிகமாக கிராம்பை உட்கொள்வதால், வாயின் உப்புற சுவற்றில் அமைந்துள்ள சளி சவ்வில் அலர்ஜியை ஏற்படுத்தி, ஈறுகள், பற்கள் மற்றும் பல் திசுக்களை கடுமையாக பாதிக்கும்.
  • கிராம்பு எண்ணெய்யை அடிக்கடி சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள உட்பொருள், சரும உணர்வை இழக்கச் செய்துவிடும்.
  • விறைப்புத்தன்மை அல்லது முன்கூட்டி விந்து வெளியேறுவது போன்ற ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை போக்க கிராம்பு நிறைந்த க்ரீம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்