தோல் உரிக்காமல் சாப்பிடக் கூடிய வாழைப்பழம்: ஒரு பழத்தின் விலை தெரியுமா?

Report Print Printha in ஆரோக்கியம்
475Shares
475Shares
ibctamil.com

ஜப்பானின் மிகக் குளிர்ந்த பிரதேசத்தில் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள் மோங்கே எனும் வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர்.

அந்தக் காலத்தில் தோன்றிய தாவரங்களின் DNA-வை வைத்து, ஜப்பானின் குளிர் மிகுந்த பிரதேசத்தில் தாவரங்களை உருவாக்குகின்றனர். அதில் ஒன்று தான் மோங்கே வாழை.

சுமார் 2 ஆண்டுகள் வளர்வதற்கு எடுத்துக் கொள்ளும் இந்த மோங்கே வாழைப்பழம், மற்ற வாழைப்பழங்களை விட மிகுந்த சுவையாக இருப்பது மட்டுமில்லாமல் அதன் தோல் மிக மெல்லியதாகவும், மிகக் குறைவான கசப்புச் சுவையையும் கொண்டுள்ளது.

அதனால் இந்த மோங்கே வாழைப்பழத்தை நூறு சதவீதம் தோலை உரிக்காமல் சாப்பிட முடியும் என்று கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு வந்த இந்த மோங்கே வாழைப்பழம் ஒன்றின் விலை ரூ.362 ரூபாயாக விற்க்கப்பட்டது.

சாதாரண வாழைப் பழத்தில் 18.3 கிராம் சர்க்கரை இருக்கும், ஆனால் இந்த மோங்கே பழத்தில் 24.8 கிராம் சர்க்கரை இருக்கிறது. இதன் மணம் கூட அதிகமாக இருக்கிறது.

சாதாரண வாழைப் பழங்களில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றுவதற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும்.

ஆனால் மோங்கேயில் பழுப்புப் புள்ளிகள் வந்த பிறகு தான் சாப்பிட முடியும். மெல்லிய தோலாக இருப்பதால் பழத்துடன் சேர்த்து எளிதாக மென்று விழுங்கி விட முடிகிறது.

இப்பழத்தில் விட்டமின் B6, செரடோனின் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், இந்த மோங்கே வாழைப்பழத்தை தோலுடன் சாப்பிடலாம். அதனால் நம் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்