ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் தீமைகள் உண்டாகும்: இதை படியுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
236Shares
236Shares
ibctamil.com

உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை தரும் ஆப்பிள் பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், அது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பதிலாக அதிக தீமைகளை விளைவிக்கும்.

அதுவும் குறிப்பாக ஆப்பிளை அரைத்து, வடிகட்டி அதன் சாற்றை மட்டும் பருகுவது தான் மிகவும் ஆபத்தானது.

ஆப்பிள் ஜூஸ் பருவதன் தீமைகள்?

  • ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் அதிகம் இருப்பதால், உடலில் பல ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  • ஆப்பிள் ஜூஸில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக் என்னும் பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

  • ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், உடல் பருமனை அதிகரித்து விடும்.

  • அதிகப்படியான கார்போஹைட்ரேட் ஆப்பிள் ஜூஸில் இருப்பதால், இதயத்தில் எண்ணற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

  • ஆப்பிள் ஜூஸ் போடும் போது, அதில் செயற்கை இனிப்பான சர்க்கரையை பயன்படுத்தி குடித்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு நோயை உண்டாக்கும்.

  • ஆப்பிள் ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால், பற்களின் ஆரோக்கியத்தை குறைத்து, பற்கள் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  • பாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸில் அதிகப்படியான ரசாயனங்கள் சேர்ப்பதால், உடலின் ஆரோக்கியத்தை அதிகமாக பாதிக்கும்.

குறிப்பு

ஆப்பிளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற, ஆப்பிள் பழத்தை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்