கண்களுக்கு கீழ் வீக்கமா?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்
339Shares
339Shares
ibctamil.com

முதுமை வயதை அடையும் போது தோல்கள் சுருங்கி, கொழுப்புகள் அனைத்தும் பைகள் போல் தேங்கி, கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை உண்டாக்கும்.

கண்ணுக்குக் கீழ் இருக்கும் செல்கள் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடியவை.

எனவே உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர் சேர்வது அதிகரித்து, அதன் காரணமாகவும் கண்ணில் வீக்கம் அதிகரிக்கும்.

சில நேரங்களில் கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கம், கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

கண்களுக்குக் கீழ் ஏற்படும் வீக்கத்தை தடுக்கும் வழிகள்?

ஆழ்ந்த உறக்கம் கண் வீக்கத்தில் இருந்து தடுக்கும் என்பதால், தினமும் ஒவ்வொரு நாள் இரவிலும் 9 மணி நேரம் உறக்கம் மிகவும் அவசியமாகும்.

நம் உடலில் சேரும் அதிக உப்பு, கண்ணில் நீரைத் தேக்கி வைத்து, வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே நம் உணவு முறையில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

குளிர்ச்சியான தட்பவெப்பநிலை கண் வீக்கத்தைக் குறைக்கச் செய்யும். எனவே கண்ணுக்குக் கீழ் குளிர்ச்சியான ஈரத்துணியை 10-20 நிமிடங்கள் வைக்கலாம் அல்லது ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி, கண்ணுக்கு கீழ் வைக்கலாம்.

ஃபிரிட்ஜில் வைத்த வெள்ளரிக்காயை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி, அதை கண்களை மூடிக் கொண்டு, இமைகளின் மேல் அந்த வெள்ளரிக்காய் துண்டுகளை சில நிமிடங்கள் வைக்க வேண்டும்.

தேநீரில் உள்ள டேனின்ஸ் (Tannins) வீக்கத்தை குறைக்கும். எனவே கண்களின் மேல் குளிர்ச்சியான தேநீர் பைகளை சில நிமிடங்கள் வைக்க வேண்டும்.

கண்களின் வீக்கத்தைக் குறைக்க தலையணையை சற்று உயரமாக தலைக்கு வைத்து தூங்க வேண்டும். அதனால் கண்கள் வீக்கம் அடையாது.

அலர்ஜியை உண்டாக்கும் தூசு, மகரந்தம், பூஞ்சை ஆகிய பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. இதனால் கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கத்தை தடுக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்