ஒரு நாள் தூங்காமல் இருந்தால் என்னாகும் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
666Shares
666Shares
ibctamil.com

ஒரு ஆரோக்கியமான உடல் நிலை வேண்டுமென்றால் ஊட்டச்சத்து உணவுகள், உடற்பயிற்சி மற்றும் சரியான அளவு தூக்கம் தேவை. தொடர்ச்சியான தூக்கமின்மை உங்கள் உடலில் டயாபெட்டீஸ், உடல் பருமன் மற்றும் இதய நோய்களை கொண்டு வந்து சேர்ந்திடும்.

குறைந்தது ஐந்து மணி நேர தூக்கம் அல்லது அதிகமான ஒன்பது மணி நேரம் தூக்கம் உடல் பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது. இவை இதய நோய்கள் மற்றும் குறைந்த தூக்கத்தால் வலிப்பு நோய்கள் போன்றவை ஏற்பட காரணமாக அமைகிறது.

குறைந்த அளவு தூக்கத்தால் மார்பக புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

குறைவான தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறனை பாதித்து சரியாக சிந்தனை செய்ய விடாமல் தடுக்கிறது.

தூக்கமின்மை உங்கள் நினைவாற்றல் திறனை பாதிக்கிறது. தூக்கமின்மை நமது மூளையின் செயல்திறனை குறைத்து விடுகிறது.

சரியான தூக்கமில்லாமல் இருப்பது உங்கள் உடலுறவுக்கான ஆர்வத்தை குறைத்து விடும். ஒரு ஆண் ஒரு வாரத்திற்கு சரியான தூக்கமில்லாமல் இருந்தால் அவரின் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் குறைந்து விடுகிறது.

சரியான தூக்கமின்மை நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து டயாபெட்டீஸ் நோய் ஏற்பட வைத்து விடுகிறது.

தூக்கமின்மை பிரச்சினை உங்கள் அழகையும் பாதிக்கிறது. சரியான அளவு தூங்காமல் இருப்பது வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

போதிய அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது உங்கள் ஆற்றல் குறைவு , சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உறவுகளுக்கிடையே பல சிக்கல்களை உண்டு பண்ணுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்