ஒரே வருடத்தில் 63.5 கிலோ எடை குறைந்த பெண்: இன்னும் KFC சிக்கன் உண்ணும் அதிசயம்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகளையும், சாக்லேட்டுகளையும், பொரித்த சிக்கனை அதிகமாக விரும்பி ருசிக்கும் Laura Lenton இரண்டு குழந்தைகளின் தாய்.

ஒரு கால கட்டத்தில் உடல் பெருத்துப்போய், பிள்ளைகளுடன் தீம் பார்க் செல்வது குதிரை ஏறுவது என்று எந்த வேடிக்கை விளையாட்டுக்களிலும் ஈடுபட முடியாமலும், வெளியே செல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டும் இருந்திருக்கிறார்.

ஆனால், Laura இன்று கிட்டத்தட்ட 63 கிலோ எடை குறைந்து தனது பிள்ளைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த நான், எப்போதும் தன்னுடைய எடையைப்பற்றியே நினைத்து வருந்திக் கொண்டு, பிள்ளைகளுடன் விளையாட முடியாமலும் வெளியே செல்ல வெட்கப்பட்டுக் கொண்டும் இருந்ததாகவும் கூறும் Laura இப்போது அந்த நிலை மாறி விட்டதாகக் கூறுகிறார்.

"இப்போது என்னால் ஒரு புகைப்படத்திற்குப் போஸ் கொடுக்கும்போது புன்னகைக்க முடிகிறது, வெட்கப்படாமல் மக்கள் கூட்டமான இடங்களுக்கும் செல்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

Slimming World டயட் மூலமாக லாராவால் இப்போதும் அவருக்குப் பிடித்தமான உணவை உண்ண முடிகிறது, ஆனால் அவை கொழுப்பின்றி ஆரோக்கியமான முறையில் இப்போது சமைக்கப்படுகின்றன.

"நான் குண்டாகிவிடுவேன் என்ற பயமும், அதன் பிறகு எனக்குப் பிடித்த உணவுகளான சாக்லேட், சீஸ் போன்றவற்றை என்னால் உண்ணவே முடியாது என்ற பயமும் எனக்கு எப்போதும் இருந்தது. ஆனால் இந்த உணவுகளை நான் தினமும் உண்ண முடியும் என்று Slimming World எனக்குக் கற்றுத் தந்தது” என்று அவர் கூறுகிறார்.

எடை இழப்பு லாராவுக்கு ஒரு புது வாழ்வைக் கொடுத்துள்ளது, அவர் மிகவும் உற்சாகமுடன் இருக்கிறார், ஒரு ஜிம்மில் சேர்ந்துள்ளார், ஜாகிங் செய்கிறார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்