டயட் இருக்கப் போறீங்களா? இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க

Report Print Printha in ஆரோக்கியம்
325Shares
325Shares
ibctamil.com

உடல் அமைப்பில் மாற்றம், மரபணு வேறுபாடுகள், இனப்பெருக்க செயல்பாடுகள் போன்றவற்றால் ஊட்டச்சத்துக்கள்களின் தேவையானது ஆண், பெண் இருபாலருக்குமே மாறுபடுகின்றது.

அதன் காரணமாக ஒரு ஆணுக்கு சராசரியாக தினமும் 2500 கலோரிகளும், பெண்ணிற்கு 2000 கலோரிகளும் தேவைப்படும்.

பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களின் தசை 30- 40% அதிகமாகும். அதன் அடிப்படையில், ஆண், பெண் இருவருக்கும் தேவையான கலோரிகள் தீர்மானிக்கப்படுகிறது.

எனவே டயட் இருப்பவர்கள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் அளவை தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

அரிசி

கார்போ ஹைட்ரேட் மூலமாகவே அதிக கலோரிகள் நமக்கு கிடைக்கிறது, அது நமது உணவில் 45-65% இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கார்போஹைட்ரேட்கள் அரிசி சம்மந்தப்பட்ட உணவுகளில் அதிகம் உள்ளது, அதைத் தவிர பாஸ்தா மற்றும் தானியங்களிலும் கலோரிகள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே, பாஸ்தா மற்றும் தானியங்களை அதிகம் உண்பதால் ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து, மனச் சோர்வு பிரச்சனையை ஏற்படுத்தும்.

பால்

ஆண்களோடு ஒப்பிடும் போது பெண்களின் எலும்பு தன்மைக்கு கால்சியம் அதிகமாக தேவைப்படுகிறது. அதனால் ஆண்களுக்கு தினமும் 700மிகி கால்சியமும், பெண்களுக்கு 1200மிகி கால்சியமும் தேவைப்படும்.

இத்தகைய கால்சியம் சத்தானது பால் பொருட்களில், குறிப்பாக பாலாடை கட்டியில் அதிகம் உள்ளது. அதை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் கால்சியம் சத்தின் தேவையை நிறைவு செய்யலாம்.

சாக்லேட்

ஆண் பெண் இருவரும் தினமும் கோகோ நிறைந்த சாக்லேட் எடுத்துக் கொள்வது மூலம் ரத்த ஓட்டம் சீராக்கப்படுகிறது. அதனால் எதிர் காலத்தில் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயங்கள் குறைக்கப்படுகிறது.

மீன்கள்

மீன்களில் உள்ள ஜிங்க் சத்து, ஆண்களுக்கு தினமும் 9.5மிகி, பெண்களுக்கு 7 மிகி தேவைப்படுகிறது. இந்த ஜிங்க் சத்துக்கள் மீன்களை போன்ற கடல் வாழ் உயிரினங்களிலும், பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளிலும் நிறைந்துள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்