தினமும் இரவு உறங்கும் முன் இதை செய்திடுங்கள்! நன்மைகள் ஏராளம்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
1098Shares
1098Shares
lankasrimarket.com

தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக உள்ளங்காலில் நறுமண எண்ணெயை கொண்டு மசாஜ் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.

உள்ளங்கால் பாதத்தில் சுமார் 70,000 நரம்புகள் முடிவடைகின்றன, எனவே பாதத்தில் மசாஜ் செய்யும் போது பல பிரச்சனைகள் சரியாகும்.

தினமும் செய்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும், மார்பு சளி குறையும், முதுமையடைவது தாமதாகும்.

உள்ளங்காலில் மசாஜ் செய்யும் போது உள்ளிழுக்கப்படும் எண்ணெய், உடலால் உறிஞ்சப்பட்டு இரத்த நாளங்களில் நுழையும், சுமார் 20 நிமிடங்களில் உடல் முழுவதும் பரவிவிடும் என தெரியவந்துள்ளது, இதற்கு காரணம் உள்ளங்காலில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததே.

  • லாவெண்டர் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.
  • கிராம்பு அல்லது புதினா எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.
  • யூகிலிட்ஸ் எண்ணெய் என்றால் சுவாச மற்றும் அலர்ஜி பிரச்சனைகள் சரியாகும், நுரையீரலையும் சுத்தம் செய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்