கண் எரிச்சலா? வீட்டிலேயே மருந்து இருக்கே

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
365Shares
365Shares
ibctamil.com

அதிக நேரம் கண் விழித்து இருப்பது, நிம்மதியான உறக்கம் இல்லாதது, கணணி/மொபைலை அதிக நேரம் பயன்படுத்துவது, தொற்றுக் கோளாறுகளால் கண் எரிச்சல் உண்டாகிறது.

இதற்காக மருந்துகளை பயன்படுத்துவதை விட எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சரிசெய்யலாம்.

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூவின் இரண்டு இதழ்களுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும், இதை வடிகட்டி காயச்சிய பால் சேர்த்து குடித்து வர கண் எரிச்சல், அலற்சி, சரியாகும்.

வில்வ இலை

வில்வ இலையை சுத்தப்படுத்து பாத்திரத்தில் போட்டு வதக்கவும், இதை ஆறவைத்து இளம்சூட்டுடன் கண்களை மூடிக்கொண்டு அரைமணிநேரம் துணியால் கட்டி எடுக்கவும், பின்னர் குளிர்ந்த நீரில் கண்களை கழுவினால் கண்வீக்கம் சரியாகும்.

அகத்தி பூ

அகத்தி பூக்களின் இதழ்களை எடுத்து சுத்தப்படுத்திய பின்னர், கருவேலம் இலைகளை சேர்த்து நீர்விட்டு கொதிக்கவிடவும், இதை வடிகட்டி ஆறவைத்த பின்னர் கண்களை கழுவினால் சிவப்பு தன்மை மாறும், கண் எரிச்சல் சரியாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்