பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க இதனை செய்யுங்கள்

Report Print Kabilan in ஆரோக்கியம்

அன்றாட உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை ஆகியவற்றால் பற்களில் கறை ஏற்படுவதுண்டு. அதனைப் போக்க அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

வீட்டிலேயே பற்களின் மஞ்சள் கறையை போக்க எளிய வழிகளை இங்கே காணலாம்.

  • தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுவது மற்றும் கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு வாயை கொப்பளிப்பதன் மூலமாக பற்களின் கறையை போக்கலாம்.
  • ஸ்ட்ராபெர்ரி பழத்தில் விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால், இதனை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், தினமும் காலை பல் துலக்கியவுடன், ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு லேசாக பற்களை தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பத்து நாட்களுக்கு செய்து வர பற்கறை நீங்கும்.

  • தினமும் கற்றாழை சாற்றை கொண்டு பற்களை தேய்த்து வர, கறை நீங்குவது மட்டுமின்றி வாய் துர்நாற்றமும் வராது.
  • ஒரு தேக்கரண்டி கிராம்பு பொடியுடன், ஆலிவ் எண்ணெய்யை கலந்து கறை படிந்த பற்களில் தேய்க்க வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு வெது வெதுப்பான நீரினால் வாயை கொப்பளிக்க கறை நீங்கும்.
  • இரவு உறங்கப் போகும் முன்பாக, ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு முதலில் பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக பற்களில் உள்ள கிருமிகள் அழிந்து பற்கள் வெண்மையாகும்.

  • தினமும் ஒரு சொட்டு ரோஸ்மெரி எண்ணெய்யை, ஒரு தேக்கரண்டி நீரில் கலந்து, வாயை கொப்பளித்தப் பின்னர் பல் துலக்கி வர பற்கள் வெண்மையாக மாறும்.
  • சீஸ் சாப்பிடுவதன் மூலம் எச்சிலில் அல்கலைன் அளவு அதிகரித்து, பற்களில் கறை படிவது தடுக்கப்படும். அத்துடன், அவை பற்களின் மேலே ஓர் படலத்தை உண்டாக்கி பற்களில் கறை படிவதையும் தடுத்திடும்.

  • உணவு சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து, ஆப்பிள் துண்டு எடுத்து சாப்பிடுங்கள். இதனால் பற்கள் சுத்தமாவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் பற்களில் கறை படிவது தடுக்கப்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்