தினமும் காலையில் 30 நிமிடம் நடந்து பாருங்க..அப்புறம் தெரியும் அதன் நன்மைகள்

Report Print Santhan in ஆரோக்கியம்
420Shares
420Shares
ibctamil.com

தினமும் குறைந்தது 30 நிமிடம் உடலுக்கு உழைப்பைக் கொடுத்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

தற்போது உடலுக்கு உழைப்பு என்பது உடற்பயிற்சியின் மூலம் தான் கிடைக்கிறது.

எனவே பலர் பணத்தை செலவழித்து ஜிம்களில் சேர்ந்து உடற்பயிற்சியை செய்து வருகிறார்கள். ஆனால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிறப்பான உடற்பயிற்சி தான் நடைப்பயிற்சி.

இந்த நடைப்பயிற்சியை ஒருவர் தினமும் காலை அல்லது மாலையில் 30 நிமிடம் மேற்கொண்டு வந்தாலே, நாம் நினைத்திராத அளவில் பல நன்மைகளைப் பெறலாம். உங்களுக்கு தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் கிடைக்கும் நன்மைகள்

  • நடைப்பயிற்சியை ஒருவர் தினமும் மேற்கொள்ளும் போது, இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும். இதன் விளைவாக இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இரத்த அழுத்தம் கட்டுப்படும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும் மற்றும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.
  • தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதன் விளைவாக தசை கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கும் மற்றும் தசைகள் நல்ல வடிவத்தையும் பெறும். மேலும் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்யாமலேயே கைகள், தொடைகள் மற்றும் பிட்டப் பகுதிகளை நல்ல வடிவத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.
  • நடைப்பயிற்சி மூளைச் செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் இது மூளைத் திசுக்களின் அளவு குறைவதைத் தடுத்து, நினைவாற்றல் இழப்பு மற்றும் முதுமையில் வரும் டிமென்ஷியா போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும். தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால், நினைவாற்றல் சிறப்பாக இருப்பதோடு, அல்சைமர் நோயின் தாக்கமும் தடுக்கப்படும்.
  • ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அன்றாடம் குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சியுடன், சரிவிகித டயட்டையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த இரண்டையும் சரியாக ஒருவர் மேற்கொண்டு வந்தால், வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் கழிக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்