பல் சொத்தையை தடுக்க இதனை செய்யுங்கள்

Report Print Kabilan in ஆரோக்கியம்

பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் இனிப்புப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதாகும்.

எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும், வாயை நீரினால் கொப்பளிக்காததும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை தடுப்பதற்கு, நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் ஒரு சில மாற்றங்களை செய்தாலே போதும்.

‘Oil pulling' என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வரை வாயினுள் வைத்து கொப்பளிப்பதாகும். இதன் மூலம், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறி, ஆரோக்கியம் மேம்படுவதோடு பற்சொத்தை ஏற்படுவதும் தடுக்கப்படும்.

கிராம் எண்ணெயை சில துளிகள் எடுத்துக் கொண்டு, அதனுடன் 1/4 தேக்கரண்டி நல்லெண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். பின்னர், அதனை ஒரு பருத்தி துணியில் தொட்டு, இரவில் உறங்கப் போகும் முன்னர் சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் சொத்தைப் பற்கள் விரைவில் குணமடையும்.

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை, உப்புடன் கலந்து அதனை பல் துலக்கும் முன்னர் வாயில் ஊற்றி, ஒரு நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று வேளையும் செய்தால் பற்சொத்தையாவதை தடுக்கலாம்.

பூண்டை 3 அல்லது 4 பல் எடுத்துக் கொண்டு, அதனை தட்டையாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 1/4 தேக்கரண்டி உப்பை சேர்த்து, அதனை 10 நிமிடங்களுக்கு சொத்தை ஏற்பட்டுள்ள பற்களின் மீது வைத்து அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு தினமும் இரு முறை செய்தால், சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து வெளியேறும். நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.

சொத்தைப் பற்களை சரிசெய்ய, மஞ்சள் தூளை எடுத்துக் கொண்டு, சொத்தையான பற்களின் மீது தடவ வேண்டும். பின்னர், 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் பற்களை கழுவ வேண்டும். இதன் மூலம், பற்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்.

வேப்பிலை சாற்றினை சொத்தையான பற்களின் மீது தடவி, 10 நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளித்தால் பற்சொத்தை நீங்கும். அல்லது வேப்பங்குச்சியைக் கொண்டு தினமும் பற்களை துலக்கினாலும் பற்சொத்தை நீங்கும்.

பற்களில் சொத்தை உண்டாவதைத் தடுக்க, கனிமச் சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும். மேலும், உணவுகளில் இனிப்பு சுவைக்காக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதிலாக, தேனைக் கலந்து கொள்வது சிறந்தது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்