நீரிழிவு நோய்க்கு சிறந்த மூலிகை வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நீரிழிவு நோய் வருவதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காதது அல்லது குறைவாக சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாததே அடிப்படை காரணமாகிறது.

தாய், தந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் வாரிசுகளுக்கும் வரும், தற்போதைய காலகட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்காக நாட்டு வைத்தியங்கள் இதோ,

  • சிறுகுறிஞ்சான் இன்சுலீன் சுரப்பை அதிகரிக்கும் இதன் இலையை பொடியை 1 டீஸ்பூன் சுடுநீரில் கலந்து உணவிற்கு பிறகு 3 வேளை உட்கொள்ளலாம்.
  • இலவங்கப்பட்டை ஒரு ஸ்பூன் பொடியை தண்ணீரில் கலந்து இரு வேளை உட்கொண்டு வரலாம்.
  • நாவல் விதையை பொடி ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து இரு வேளை குடிக்கலாம் இதனால் இரத்த சக்கரையின் அளவை குறைக்கின்றது.
  • வெந்தையத்தை இரவில் ஊரவைத்து காலையில் சாப்பிடலாம். அல்லது வெந்தயப் பொடிரய மோரில் உணவுக்கு முன்பு குடிக்கலாம்.
  • பாகற்காய் சாற்றை வெறும் வயிற்றில் அருந்தலாம் அல்லது நீரில் கொதிக்க வைத்து நீரை குடிக்கலாம்.
  • நெல்லிக்காய் சாறு ஒரு மேசைக்கரண்டி ஒரு கப் பாகற்காய் சாற்றுடன் அருந்தலாம்.
  • அஸ்வகந்தா (அமுக்கிராக்கிழங்கு) இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் உடல் வலிமையை அதிகரிக்க செய்யும். இதை ஒரு நாளைக்கு 4 அல்லது 5 கிராம் உட்கொள்ள வேண்டும.
  • வில்வ இலை சாற்றுடன் சிறிதளவு கருமிளகு பொடி சேர்த்து தினமும் உட்கொள்ளலாம்.
  • வேம்பு நீரிழிவுக்கு அருமருந்து, இதன் உலர்ந்த இலைகளுடன் மரப்பட்டையையும் சேர்த்து பொடி செய்து உட்கொள்ளாலாம்.
  • கோவைக்காயின் உலர்ந்த இலைகளுடன் மரப்பட்டையையும் சேர்த்து பொடி செய்து உட்கொள்ளலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்