இதயம் செயலிழக்க போகிறது: முக்கிய அறிகுறிகள் இவை தான்

Report Print Raju Raju in ஆரோக்கியம்

மனிதர்களின் உடலில் பல முக்கிய உறுப்புகள் இருந்தாலும், எல்லாவற்றையும் விட அதிமுக்கிய உறுப்பு இதயமாகும்.

தற்போது மாறி வரும் கலாச்சாரம், உணவு பழக்கம் காரணமாக இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒருவரின் இதயம் செயலிழக்க போகிறது என்பதை சில முக்கிய அறிகுறிகளை வைத்து கணிக்க முடியும், இதை வைத்து உடனடியாக மருத்துவர்களை அணுகினால் இதய செயலிழப்பிலிருந்து தப்பிக்க முடியும்.

இதய செயலிழப்பிற்கான அறிகுறிகள்
மூச்சு திணறல்

மூச்சு திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் என்பது இதய செயலிழிப்பின் முக்கிய அறிகுறியாகும். நுரையீரலில் இருந்து ஆக்சிஜன் கலந்த ரத்தம் இதயத்துக்கு செல்லும் நிலையில் அது தடைப்படும்.

இதனால் சாதாரண வேலை அல்லது எளிய உடற்பயிற்சி செய்யும் போது கூட மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருக்கும்.

உடல் சோர்வு

இதயம் செயலிக்க தொடங்கினால் உடல் முழுவதற்கும் தேவையான ரத்தத்தை இதயத்தால் வெளிக்கொண்டு வர முடியாது.

உடலுக்கு சரியான ரத்த ஓட்டம் கிடைக்காமல் போனால் உடலானது மிகவும் சோர்வாகவும், வலியாகவும் இருக்கும்.

ஒழுங்கற்ற இதய துடிப்பு

ஆரோக்கியமான மனிதர்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 60லிருந்து 100 முறை வரை இதயம் துடிக்கும். ஆனால் இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு இதன் எண்ணிக்கை மாறுவதோடு, சில சமயம் அதிவேகமாகவும், சில சமயம் மெதுவாக என ஒழுங்கற்ற நிலையில் துடிக்கும்.

குமட்டல்

கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பு நெருக்கமாகி விட்டால், உடலுக்கு ரத்தம் சாதாரணமாக வழங்கப்படுவது தடுக்கப்படும்.

இதன் காரணமாக எதுவும் சாப்பிடவில்லை என்றாலும் குமட்டல் இருந்து கொண்டே இருக்கும்.

உடல் எடை கூடுதல்

உடல் முழுவதிலும் திரவம் அதிகளவில் உருவானால் திடீரென உடலில் எடை அதிகரித்து கொண்டே போகும். இதுவும் இதய செயலிழப்புக்கான அறிகுறி தான்.

தொடர் இருமல்

சாதாரணமாக இருமல் வந்து சில தினங்களில் குணமாகிவிட்டால் பிரச்சனையில்லை. ஆனால் எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் இருமல் குணமாகாமல் இருந்தால் நுரையீரலில் திரவ உருவாக்கம் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். இது இதய ரத்த ஓட்டத்தை தடை செய்ய வாய்ப்புள்ளது.

வீக்கம்

சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டம் குறைவாக சென்றால், அதில் உப்பு மற்றும் நீர் அதிகளவில் தங்கும். இதனால் பாதம், கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும்.

மேலே கூறப்பட்ட அறிகுறிகள் எல்லாமே இதயத்தின் செயல்பாடு மற்றும் பலத்தை குறைத்து இதய செயலிழப்பை ஏற்படுத்துகின்றன.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்