பாதாமை நீரில் சேர்த்து சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள்

Report Print Thuyavan in ஆரோக்கியம்

பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளதால், இதை நீரில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிக பலன்களை பெறலாம்.

  • முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை அதிகம் இருப்பதால் பெரும்பாலான மருத்துவர்கள், வைட்டமின் ஈ மாத்திரைகளையே பரிந்துரைகின்றனர், இத்தகைய வைட்டமின் ஈ பாதாமில் அதிக அளவில் உள்ளதால் சருமத்திற்கு அழகையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.
  • பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.
  • இதயத்திற்கு சிறந்த பாதுகாப்பை தரும் பாதாமில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது உடலில் கொழுப்புக்கள் உறிஞ்சுவதைத் தடுக்கும்.
  • மேலும் இதில் உள்ள மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • கொழுப்புக்கள் உறிஞ்சுவது தடுக்கப்படுவதால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதயத்திற்கு பாதிப்பு அளிக்கிறது.
  • ஆற்றல் திறனை அதிகப்படுத்தும் வகையில், ரிபோஃப்ளேவின் மற்றும் மக்னீசியம் போன்ற உடலின் எனர்ஜியை அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவிபுரியும்.
  • அன்றாடம் பாதாம் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்திருப்பதால் பசி ஏற்படுவதை தடுத்து, தீங்கு விளைவிக்கும் உணவுகளின் மேல் தோன்றும் நாட்டத்தை குறைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்