பிரசவத்துக்கு பின் எடை அதிகரித்து விட்டதா? ஈஸியா குறைக்கலாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக பெண் தாயானதுமே ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பருமனாகி விடுகின்றார்கள்.

ஏனெனில் சிலருக்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். இன்னும் சிலருக்கு தசைகளில் அதீத வளர்ச்சி உண்டாகி இடுப்பு பகுதிகளில் சதை போட்டுவிடும்.

இன்னும் சிலரே சரியாக உடற்பயிற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தால் உடல் பருமனாகிவிடுகிறார்கள்.

உடல் பருமனை குறைக்க குழந்தை பிறந்ததும் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் பின் வரும் நாட்களில் உடல் பருமனால் வரும் சர்க்கரை வியாதி, இதய நோய்களை தடுக்கலாம். இதற்கு தீர்வு வாழைத்தண்டு. இது உடல் எடை குறைக்க நினைக்கு பெண்களுக்கு அருமருந்தாகும்.

வாழைதண்டு கொழுப்பைக் குறைக்கும், வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும், சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும் ஆற்றல் கொண்டது.

வாழைத்தண்டு ஜூஸ்

  • வாழைத்தண்டு
  • மிளகு
  • சீரகம்
  • பூண்டு
  • எலுமிச்சை சாறு
  • சிறிது உப்பு

வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் பருமன் நாளுக்கு நாள் குறைந்துவரும்.

வாழைத்தண்டு மோர்

  • வாழைத்தண்டு
  • மோர்
  • இஞ்சி சாறு
  • பெருங்காயத் தூள்

வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.

இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும். இஞ்சிச்சாறு, உப்பு பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்று உப்புசம், வயிற்று கோளாறு நீங்கும், சிறுநீரக கற்கள் கரைவதுடன் உடற்பருமன் குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்