நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த இந்த பழக்கத்தை விட வேண்டாம்!

Report Print Harishan in ஆரோக்கியம்

பேருந்து, ரயில், சோபா, அலுவலகம், வீடு, பள்ளி என பெரும்பாலும் நம் கால்களை தொங்கவைத்தே அமர்ந்திருக்கிறோம்.

ஆனால் அப்படி உட்காருவதால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய சீர்கேடுகள் வருவதை நாம் உணர்வதில்லை.

அவ்வாறு காலை தொங்கவைத்து உட்காரும்போது நமது உடலின் கீழ்ப்குதிக்கு மட்டுமே ரத்தம் அதிகமாக செல்கிறது.

பொதுவாக நடக்கும்போது மட்டும் நம் கால்களுக்கு ரத்தஓட்டம் சென்றால் போதுமானது. ஏனென்றால் உடலின் மிக முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது, ஆகியவை இடுப்புக்கு மேலே இருப்பதால் சம்மணம் போட்டு உட்காருவது தான் சக்தி தரும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எங்கு? எப்படி? உட்கார்ந்து சாப்பிட வேண்டும்

  • நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்.
  • சாப்பிடும் முன்பு சிறிது தூரம் நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும், இரவு சாப்பிட்ட பின் சிறிது தூரம் நடப்பது நலம்.
  • தரையில் உட்கார்ந்து சாப்பிடுவோர் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் ஜீரணம் நன்றாக இருக்கும்.
  • டைனிங் டேபிள் உள்ளிட்ட மேஜையில் அமர்ந்து சாப்பிடும்போது காலை மடித்து சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்களால் சம்மணம் போட்டு கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் உங்கள் உடலை அந்த அளவுக்கு கெடுத்து வைத்துள்ளீர்கள் என அர்த்தம்.

மேற்கண்டவற்றை பின்பற்றுவதால் நல்ல முன்னேற்றத்தை நிச்சயம் உணர்வீர்கள். குறிப்பாக ஐரோப்பிய முறை கழிவறையை பயன்படுத்தாமல் இந்திய முறை கழிவறையை பயன்படுத்திடுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்