கெட்ட கொழுப்பு நீங்கி ஆரோக்கியம் வேண்டுமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Harishan in ஆரோக்கியம்

செரிமானக் கோளாறுகள் நீங்கி உடலின் கெட்ட கொழுப்புகள் தேங்குவதை தவிர்க்கும் உணவு வகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

சமமான நியூட்ரிசியன்கள் இல்லாததால் தான் உடல் சோர்வு தொடங்கி பல உடல் உபாதைகள் நமக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்தான ஆகாரங்களை சாப்பிடுவதால் மட்டும் ஆரோக்கியம் கிடைத்துவிடாது என கூறும் ஆராய்ச்சியாளர்கள், முறையான விட்டமின்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என கூறுகின்றனர்.

அவ்வாறு உடலின் கெட்டக் கொழுப்புகளை நீக்கி ஆரோக்கியம் தரும் விட்டமின்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அத்தியாவசியமான விட்டமின் வகைகள்
  • நம் உடலின் எனர்ஜிக்கு அடிப்படையாக விளங்கும் விட்டமின் B1-இல் தான் செரிமானத்திற்கு தேவையான அனைத்தும் இருக்கிறது. அரிசி, தானியங்கள் போன்றவைகளில் விட்டமின் பி1 அதிகம் இருக்கிறது.
  • செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும் விட்டமின் பி3-இல் தான் சர்க்கரை நோய், காட்ராக்ட், அல்சைமர் ஆகிய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் சக்தியும் உள்ளது. கடலை, பீட்ரூட் போன்றவைகளில் அதிகம் இருக்கும் இந்த வகை விட்டமினை சேர்த்துக்கொள்வதால் உடலில் கெட்டக் கொழுப்புகள் தேங்குவதை தவிர்க்கலாம்.
  • விட்டமின் பி12 நம் நினைவுத்திறனை அதிகப்படுத்தும் வல்லமை கொண்டது. மீன், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிகம் நிறைந்திருக்கும் இந்த வகை விட்டமினை அதிகம் சேர்த்துக் கொண்டால் மன அழுத்தம், டிப்ரஷன், சர்க்கரை நோய், குழந்தையின்மை பிரச்சனை, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
  • நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் விட்டமின் பி2 தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பார்வைக்குறைபாடு, அதீத சோர்வு ஆகியவற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. பச்சைக் காய்கறிகள், சோயா பீன்ஸ், காளான், பாதாம், முட்டை, நட்ஸ் ஆகியவற்றில் விட்டமின் பி2 அதிகம் நிறைந்திருக்கும்.
  • ப்ரோட்டின், கார்போஹைட்ரேட் செரிமானத்திற்கு விட்டமின் பி6. வால்நட், கீரைகள், பட்டாணி, மீன், முட்டை, கேரட் ஆகியவற்றில் அதிகம் நிறைந்திருக்கும், இந்த வகை விட்டமின் தான் நரம்பு மண்டலத்தை சீராக வைப்பதுடன் நம் மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்க உதவுகிறது.
  • விட்டமின் டி மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும், கால்சியத்தை கிரகித்துக் கொள்ள உதவும். தனி உணவு என அதையும் எடுத்துக் கொள்ளாமல் சூரியஒளி படுமாறு சில மணித்துளிகள் நின்றாலே போதுமானது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்