வெறும் தண்ணீரே போதும் உடல் எடையை குறைக்க!

Report Print Kabilan in ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள் என பலரும் கடைபிடித்து வரும் நிலையில் தண்ணீரை கொண்டு உடல் எடையை குறைக்க முடியும் என உங்களுக்கு தெரியுமா?

நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் முறையாக இயங்க தண்ணீர் மிகவும் அவசியம், தண்ணீர் உடல் எடையை குறைப்பதுடன் சருமப் பொலிவிற்கும் உதவுகிறது.

சராசரியாக ஒருவரின் உடல் 65 சதவிகிதம் தண்ணீரால் நிறைந்தது, உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது.

  • மதிய உணவிற்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும், இவ்வாறு செய்யும் போது, கலோரிகள் சேர்க்கப்படாமலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும், குறைவாகவே சாப்பிடுவீர்கள். மிக முக்கியமாக உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்தக்கூடாது, இதனால் செரிமானம் சீராவதுடன் உடல் எடை குறைகிறது.
  • சோடா, ஆல்கஹால், கலோரி நிறைந்த பானங்களுக்கு பதிலாக ஒரு தம்ளர் தண்ணீரை அருந்தலாம். ஒருவேளை தண்ணீரின் சுவை உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினால், எலுமிச்சை துண்டுகளை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். குளிர்பானங்களை சில வாரங்களுக்கு தவிர்த்து விட்டு பாருங்கள், உங்கள் எடையில் நிச்சயம் மாற்றம் தெரியும்.
  • ஒருநாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீரை பருக வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்