இவை தான் உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கிறது என தெரியுமா?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
1661Shares
1661Shares
ibctamil.com

ஒரு நாளைக்கு ஒருவர் அதிகளவு சிறுநீர் கழிப்பது நல்லது தான். ஆனால் 20 நிமிடத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழித்தால், நிச்சயம் அது கவனிக்கப்பட வேண்டிய ஓர் பிரச்சனை.

ஒருவர் ஒரு நாளைக்கு 8-10 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேரிட்டாலோ அல்லது இன்னும் மிகக்குறுகிய இடைவெளியில் சிறுநீர் கழித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் இப்பிரச்சனை குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.

பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும். எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர் அவரசமாக வருவது போன்ற உணர்வு எழும்.

சிலருக்கு சிறுநீர்ப்பையில் 1-1.5 கப் சிறுநீர் தான் சேரும். இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.

உடலில் போதுமான அளவு நீர் இல்லாத போது, சிறுநீரின் அடர்த்தி அதிகமாகும். சிறுநீரின் அடர்த்தி அதிகம் இருக்கும் போது, அது சிறுநீர்ப்பையில் எரிச்சலை உண்டாக்கி, அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வைத் தரும்.

போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

இடுப்புப் பகுதியைச் சுற்றிய தசைகள் அல்லது அடிவயிற்றுப் பகுதி பலவீனமாக இருந்தால், அது சிறுநீரை அடக்க முடியாமல் செய்யும்.

இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதனைத் தவிர்ப்பதற்கு இடுப்பு தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம், சரும அலர்ஜி, மன இறுக்கம் போன்றவற்றிற்கு மாத்திரைகளை எடுப்பவர்களாயின், தற்காலிகமாக சிறுநீர்ப்பை பலவீனமாகி, அடிக்கடி சிறுநீரை கழிக்கச் செய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்