இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? அப்ப கல்லீரல் பாதிப்பு நிச்சயம்

Report Print Raju Raju in ஆரோக்கியம்

மனித உடலில் இருக்கும் பல்வேறு உறுப்புகளில் கல்லீரல் அதிமுக்கியமான உறுப்பாகும்.

பித்த நீர் சுரக்க, ஹீமோகுளோபின் அமைப்பில் பங்களிக்கும் இரும்பு மற்றும் ஏனைய தனிமங்கள், உயிர்ச்சத்துக்கள், காயங்கள் ஆற என பல முக்கிய செயல்பாடுகளுக்கு கல்லீரல் உதவுகிறது.

நாம் மேற்கொள்ளும் சில தவறான பழக்கவழக்கங்களால் கல்லீரல் பாதிப்படைந்து முடிவில் அது செயலிழக்கிறது.

மருந்து / மாத்திரைகள்

மருந்து, மாத்திரைகள் மற்றும் கூடுதல் எனர்ஜி பவுடர்கள் அதிகளவில் எடுத்துக்கொள்வதன் மூலமாக கூட கல்லீரல் செயலிழக்கும்.

அதனால் அடிக்கடி தேவையில்லாமல் மாத்திரைகள் சாப்பிட கூடாது.

தூக்கமின்மை

தூக்கமின்மை கல்லீரலில் ஆக்ஸிடேடிவ் அழுத்தம் ஏற்பட காரணியாக இருக்கின்றது. இதனால் சரியான அளவில் தூங்க வேண்டியது அவசியமாகும்.

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு, சரியான அளவு ஊட்டச்சத்துக்கள் உணவில் இல்லாமல் இருப்பது, உடல்பருமன் போன்றவை தொடர்ந்தால் அது கல்லீரலை பாதிக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவு கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனம், செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கொழுப்புகள்

மனித உடலில் எல்.டி.எல் என்னும் தீய கொழுப்பு அதிகமாக சேர்வதால் இதயம் மட்டுமின்றி கல்லீரலும் பாதிப்படைகிறது.

இதை தவிர்க்க காய்கறி, பழங்களை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

உணவை தவிர்ப்பது

காலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தால் கல்லீரலின் செயல்பாடு குறைய தொடங்கும். அதனால் எக்காரணம் கொண்டும் காலை உணவை சாப்பிடாமல் இருக்க கூடாது.

மது அருந்துவது

கல்லீரல் பாதிப்படைய மிக முக்கிய காரணமாக இருப்பது மது அருந்துவது தான். தினமும் மூன்று க்ளாஸ் மது குடித்தால் கண்டிப்பாக கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பதால் நுரையீரல் மட்டுமே பாதிக்கும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் கல்லீரலும் மிகுதியாக பாதிப்படைகிறது

சிகரெட் மூலமாக உடலில் சேரும் நச்சுக்கள் கல்லீரலில் அதிகரித்து அதன் செல்களில் சேதத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்