தினமும் 5 நிமிடம் இப்படி செய்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

Report Print Harishan in ஆரோக்கியம்
267Shares
267Shares
lankasrimarket.com

நம் மற்றவர் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த அவர்களுக்கு முத்தம் கொடுப்பது வழக்கம். அவ்வாறு முத்தம் கொடுப்பதால் நம் உடலின் ஆரோக்கியம் பல மடங்குகள் மேம்படுகிறது.

அவ்வாறு தினமும் ஐந்து நிமிடங்கள் இதழ் முத்தம் கொடுப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

  • முத்தம் கொடுப்பதால் நம் இதயத்தின் ஆரோக்கியம் இயற்கையாகவே மேம்படும். அதுவும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு முத்தம் கொடுக்கும் போது நம் உணர்வுகள் தூண்டப்படுவதால் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைந்து ரத்த ஓட்டம் நன்றாக இருக்க உதவுகிறது.
  • நாம் முத்தம் கொடுத்த பின் வேகமாக சுவாசிப்போம். அப்போது நுரையீரல் வழியாக மூச்சு வேகமாக உள்ளே சென்று வருவதால், நுரையீரல் குறித்த சுவாச பிரச்சனைகள் நீங்கி வாழ்நாள் நீடிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இதழ் முத்தம் கொடுத்துக் கொள்வதால் நம் பற்கள் வெள்ளையாவதோடு பல் சொத்தையாவதும் தடுக்கப்படுகிறதாம்.
  • இதழ் முத்தம் பரிமாரிக் கொள்வதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பிறப்பு குறைபாடு தடுக்கப்படுகிறது.
  • முத்தம் கொடுத்துக் கொள்வதால் நம் உடலின் கலோரிகள் எரிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
  • அடிக்கடி முத்தம் கொடுக்கும் போது உடலில் அட்ரினலின் மற்றும் நோர்அட்ரினலின் வெளியீடு ஊக்குவிக்கப்பட்டு இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்க உதவுகிறது. இதனால் தான் முத்தம் கொடுத்த பிறகு நாம் மிகவும் உற்சாக இருக்க முடிகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்