சாதாரண தண்ணீரை அதிகமாக குடிப்பதும் ஆபத்தா? பக்கவிளைவுகளை பாருங்க

Report Print Printha in ஆரோக்கியம்
473Shares
473Shares
lankasrimarket.com

உணவுகள் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் அவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் பல்வேறு பக்கவிளைவு பிரச்சனைகளை சந்திக்கக் கூடும்.

அதேபோல் தான் தண்ணீரும் அளவுக்கு அதிகமாக குடித்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமாம்.

தண்ணீரை எவ்வளவு குடிப்பது நல்லது?

ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் அவசியமானது. அதேப் போல் ஒவ்வொருவரின் உடல் வாகுக்கு ஏற்ப நீரின் அளவும் வேறுபடும்.

சில வகையான உடலுக்கு ஒரு நாளைக்கு குறைவான அளவு தண்ணீரே போதுமானது. அத்தகையவர்கள் அளவுக்கு அதிகமாக நீரைப் பருகும் போது, உடலினுள் உள்ள உறுப்புகள் அதிக சுமை மற்றும் அதிக அழுத்தத்திற்கு உட்பட்டு பக்க விளைவுகள் உண்டாகிறது.

தண்ணீரை அளவுக்கு அதிகம் பருகுவதன் பக்கவிளைவுகள்?
  • அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்கும் போது, இதயத்தில் சுமை மற்றும் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும். அதனால் ரத்த அழுத்தம் , பக்கவாதம் மற்றும் இதய பிரச்சனைகள் ஏற்படும்.
  • உடலினுள் உள்ள செல்களின் சீரான செயல்பாட்டிற்கு அதிகமாக நீர் இருந்தால், செல்களின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, செல்களை வீக்கமடையச் செய்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
  • அதிகளவு நீரைக் குடிக்கும் போது, கல்லீரலின் செயல்பாடு பாதிப்பிற்கு உள்ளாகும். அதோடு இரும்புச்சத்து பானமாக இருந்தால், வளர்சிதை மாற்றம் செய்யும் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்தி விடும்.
  • அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிட்டு, அதன் மூலம் கழிவுகளை மட்டுமின்றி, ஊட்டச்சத்துக்களையும் உடலில் இருந்து வெளியேற்றிவிடும். அதனால் சிறுநீரக பிரச்சனை கூட ஏற்படலாம்.
  • குளோரின் மிகுந்த நீரை அதிகம் குடிக்கக் கூடாது. ஏனெனில் புற்றுநோய் மற்றும் உடலுறுப்புக்களின் செயல்பாட்டை தடுத்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம்.
  • நீரை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, மூளையில் நீர்க்கட்டு, வீக்கம் ஏற்படுவது மிகவும் அரிது. ஆனாலும் இந்நிகழ்வு ஏற்பட்டால், உயிரையே இழக்கும் வாய்ப்புள்ளது.
  • அளவுக்கு அதிகமாக நீரைக் குடித்தால், அடி வயிற்றில் வலியுடன், எரிச்சலையும் சந்திக்கக்கூடும். அதோடு அடிவயிறு வீங்கி, மூட்டு மற்றும் கால்களில் கூட வலியை ஏற்படுத்தும்.
குறிப்பு

தண்ணீரை அளவோடு குடிப்பது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதேபோல் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அவற்றை அளவுக்கு அதிகமாக மட்டும் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்