கண்ணை கவரும் ஊதா நிற மாம்பழம்: சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிடலாம்

Report Print Printha in ஆரோக்கியம்
776Shares
776Shares
lankasrimarket.com

உத்திர பிரதேச மாநிலம் மலிகாபாத்தில் இருக்கும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து 2007-10-ம் ஆண்டு வரையிலான தொடர் ஆய்வுகளின் பயனாக ஊதா நிறமுள்ள மாம்பழத்தை கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ தாகத்தை தீர்ப்பதற்காகவே இந்த ஊதாநிற மாம்பழம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ப்ளாக் பெர்ரி பழங்களின் மரபியல் காரணியுடன் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஊத நிறமுடைய மாம்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பழமாக உள்ளது.

இவ்வகை மாம்பழங்கள் தற்போது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் எனும் பகுதியில் அமோகமாக விளைக்கப்பட்டு வருகிறது.

ஊதா நிறமுள்ள மாம்பழத்தின் நன்மைகள்
  • இந்த ஊதா நிற மாம்பழம் வழக்கமான மஞ்சள் நிற மாம்பழத்தை விட வெறும் 25 சதவீதம் மட்டுமே இனிப்புச் சுவையை கொண்டுள்ளது.
  • சாதாரண மாம்பழங்களில் 96 சதவீதம் குளுக்கோஸ் இருக்கும். ஆனால் ஊதா மாம்பழத்தில் 82% சுக்ரோஸ், 18% குளுக்கோஸ் உள்ளது.
  • இந்த ஊதா மாம்பழம் இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தி மிகுந்த பாக்டீரியாக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால் இதற்கு யூரியா, உரம் தேவையில்லை.
  • இவ்வகை மாம்பழங்கள் அனைத்து விதமான மண் வகைகளிலுமே வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது. இதில் சர்க்கரை அளவும் மிகக் குறைவு.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்