உடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத எளிய வழி: இவர்கள் பின்பற்றியதாம்

Report Print Printha in ஆரோக்கியம்
860Shares
860Shares
lankasrimarket.com

உடலில் அதிகப்படியான கொழுப்புக்களின் தேக்கத்தால் ஒருவரது உயரத்திற்கும் அதிகமான உடல் எடை கூடுகிறது.

உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதற்கு, பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய சில இயற்கையான வழிகள் இதோ,

எலுமிச்சை பழம்

ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த பானத்தை தொடர்ந்து குறைந்தது 3 மாதம் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கற்றாழை

கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து அதனுடன் 1 கப் ஆரஞ்சு அல்லது திராட்சை அல்லது வெறும் நீரை மட்டும் ஊற்றி, 2-3 நிமிடம் அரைத்து அதை தினமும் ஒரு முறை என்று 1 மாதம் தொடர்ந்து குடிக்க, வேண்டும்.

க்ரீன் டீ

தினமும் 3-4 கப் க்ரீன் டீ குடிக்கலாம் அல்லது க்ரீன் டீயுடன் இஞ்சி சாறு அல்லது மிளகுத் தூள் கலந்து குடித்து வந்தால் உடல் எடையில் சிறப்பான மாற்றத்தைக் காணலாம்.

வரமிளகாய்

ஒரு டம்ளர் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறு, ஒரு சிட்டிகை மிளகாய் தூள் கலந்து, குறைந்தது ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வேகமாக கரைந்து உடல் எடை குறையும்.

கறிவேப்பிலை

தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை காலையில் எழுந்ததும் சாப்பிடுவதன் மூலம், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றைத் தடுக்கலாம் என ஆயுர்வேதம் கூறுகிறது.

அதிலும் குறைந்தது 3-4 மாதம் தொடர்ந்து கறிவேப்பிலையை குடித்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமனில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தக்காளி

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 தக்காளியை சாப்பிட வேண்டும். அதுவும் தக்காளியை தோல் மற்றும் விதையுடன் சாப்பிட வேண்டும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை பச்சையாக அல்லது வேக வைத்து சாப்பிடுவதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம். மேலும் இதனால் உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் செய்து, மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பல பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்