உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா?

Report Print Santhan in ஆரோக்கியம்
719Shares
719Shares
lankasrimarket.com

உடல் எடையை படிப்படியாகத் தான் குறைக்க முடியும். ஒரேயடியாக குறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், சாப்பிடாமல் வருத்தி உடலைக் கெடுத்துக் கொள்பவர்களே அதிகம்.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தாண்டி, உடல் எடையைக் குறைக்க சில யுக்திகளை கையாள வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

காலை உணவை தவிர்க்காதீர்கள்

காலை உணவை தவிர்த்தீர்கள் என்றால், மதிய நேரத்தில் அதிகமாக உணவை உட்கொள்ள நேரிடும். காலை உணவை தவிர்க்காதவர்கள், ஒல்லியாகவோ அல்லது உடல் பருமனால் பாதிக்க நேரிடாதவர்களோ இருப்பதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனால், காலையில் நார்ச்சத்து, புரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

காலையில் சூடான நீரை அருந்துங்கள்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சூடான நீரை அருந்தினால், அந்நாள் முழுவதும் செரிமானத்திற்கு துணைபுரியும். அதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்க்க மறந்துவிடாதீர்கள்.

புரோட்டீனை உட்கொள்ளுங்கள்

புரோட்டீனை அதிகமாக எடுத்துக் கொள்வது எடை குறைப்புக்கு உதவும். அனைத்து வேளை உணவுகளிலும் புரோட்டீனை உணவாகக் கொள்ளலாம். புரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம், நீங்கள் புல்லாக உணர்வீர்கள். உடலில் கொழுப்பை கரைக்கவும் இது உதவும்

கார்போஹைட்ரேட், சர்க்கரையை தவிர்த்திடுங்கள்

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டால் உங்கள் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

நன்றாக உறங்குங்கள்

உறக்கத்தால் நீங்கள் புத்துணர்ச்சி அடைவீர்கள். தூக்கமின்மையால் உங்களுக்கு பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் வேலை செய்யும். அதனால், தினமும் 7-8 மணிநேரம் உறக்கம் அவசியம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்