ஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்

Report Print Printha in ஆரோக்கியம்
1338Shares
1338Shares
lankasrimarket.com

திராட்சையை கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் போன்ற நிறங்களின் அடிப்படையில் 3 வகைகள் உள்ளது. இந்த மூன்று வகை திராட்சைகளிலுமே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளது.

அதிலும் கருப்பு நிற திராட்சையை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • கருப்பு திராட்சையில் உள்ள பாலிஃபீனால்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது.
  • மார்பக புற்றுநோய் மற்றும் இதர வகை புற்றுநோய்களையும் எதிர்த்து போராடி புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
  • செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • கருப்பு திராட்சை யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, கழிவுகள் எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவுகிறது.
  • ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற, கருப்பு திராட்சையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, காலையில் குடிக்க வேண்டும்.
  • தினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
  • சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், அது ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.
  • ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளும்.
  • சரும செல்களை ஆரோக்கியமாக பாதுகாத்து, முதுமைத் தோற்றம், வறட்சியான சருமம் வறண்டு, மென்மையிழந்து அசிங்கமாக இருக்கும் தோற்றம் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • கருப்பு திராட்சை விதைகளை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை ஏற்படாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்