இரவு தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிடுங்கள்: நன்மைகள் ஏராளம்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
631Shares
631Shares
lankasrimarket.com

செலரியில் ஏராளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நன்மை விளைவிக்கும் நொதிகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அடங்கியுள்ளது.

உங்களுக்கு எடையைக் குறைக்க வேண்டுமா? அப்படியானால் செலரி உங்களது இலக்கை அடைய பெரிதும் உதவியாக இருக்கும்.

செலரில் கரையச்கூடிய நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

செலரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலிபீனால்கள் போன்ற உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் மூட்டு வலியைத் தடுக்கும் உட்பொருட்கள் ஏராளமாக உள்ளன. ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், செலரியை கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஒரு நாளைக்கு 2 தண்டு செலரியை சாப்பிட்டால், 7% கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும். ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட உணவில் செலரியை சேர்ப்பது மிகவும் நல்லது.

ஒரு தண்டு செலரியில் ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் சி-யில் 10% உள்ளது. வைட்டமின் சி கண்களைப் பாதுகாக்கும் மற்றும் வயதான காலத்தில் ஏற்படும் பார்வை கோளாறைத் தடுக்கும்.

செலரியை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது மார்பகங்களில் உருவாகும் புற்றுநோய் செல்களைத் தடுத்து அழித்து, மார்பக புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும்.

பாலுணர்ச்சியைத் தூண்டப்பட்டு பாலியல் வாழ்க்கை சிறக்க வேண்டுமானால், தினமும் சிறிது செலரியை உணவில் சேர்த்து வாருங்கள்.

செலரி யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் மற்றும் சிறுநீரின் உற்பத்தியை தூண்டும். அதோடு செரிமான பாதை மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்