இரவு உறங்கும் முன் தோலுடன் 1 ஆப்பிள் சாப்பிடுங்கள்: அதனால் ஏற்படும் அற்புதம் தெரியுமா?

Report Print Printha in ஆரோக்கியம்
570Shares
570Shares
lankasrimarket.com

ஆப்பிள் பழங்களில் பல வகைகள் இருந்தாலும் அவை அனைத்திலுமே ஒரே வகை சத்துக்கள் தான் உள்ளது.

அதாவது ஆப்பிள் பழத்தில் ப்ளேவோனாய்டு, பாலிஃபீனால்கள், விட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், பாஸ்பர், கால்சியம் போன்றவை அதிகமாக காணப்படுகிறது.

எனவே இந்த ஆப்பிள் பழத்தை தோலுடன் தினமும் ஒன்று இரவு உறங்கு முன் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.

நன்மைகள்
  • ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவை வராது.
  • ஆப்பிள் புற்றுநோயைத் தடுக்கும். அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கிறது.
  • நமது பெருங்குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது.
  • ஆப்பிளில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிப்பதன் மூலம், ரத்த சோகை பிரச்சனை வராமல் தடுக்க உதவுகிறது.
  • ஆப்பிள் உடல் பலவீனத்தைக் குறைத்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிப்பதுடன் உடலின் சோர்வு நிலையை போக்குகிறது.
  • சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதுடன், ரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கிறது.
  • உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலுக்கு அளித்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • ஆப்பிளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூச்சுக்குழாய்களில் உள்ள அழற்சியைக் குறைத்து, சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா வருவதைத் தடுக்கிறது.
  • ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பணபுகள், மூளையில் உள்ள செல்கள் சிதைவடையாமல் பாதுகாத்து, அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்