ஒருநாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடலாம்?

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

பாதாமில் உள்ள நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் புற்றுநோய் வரவிடாமல் தடுப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதிலுள்ள விட்டமின்களும், தாதுச்சத்துகளும் உடலுக்கு வலு சேர்க்கின்றன.

தினமும் பாதாமை சாப்பிட்டு வருவது நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கிறது.

நினைவாற்றலை அதிகரிக்கவும், நரம்புகளை பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் இரவில் பாதாமை ஊறவைத்து காலையில் சாப்பிடலாம்.

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாக குறையும்.

எனினும் இதை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும்.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் வரையில் சாப்பிடலாம், ஒரு அவுன்ஸ் என்பது 31 கிராம்(4 முதல் 7 எண்ணிக்கையில்).

இதில் உங்களுக்கு 160 கிராம் கலோரியும் ஆறு கிராம் ப்ரோட்டீனும்,14 கிராம் கொழுப்பு, ஐந்து கிராம் ஃபைபர் ஆகியவை கிடைத்திடும்.

பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீட்சை மற்றும் கிஸ்மிஸ் பழத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம். காலையில் மற்றும் மாலையில் என பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் பாதாமின் தோலில் அதிகப்படியான டேனின் இருப்பதால் அவ்வளவு எளிதில் சத்துகளை வெளிவிடாது, எனவே தோலை நீக்கிவிட்டு சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்