பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்

மிதமான அளவு இளநீர் பருகும்போது நன்மையைச் செய்கிறது. இந்த பானம் உடலுக்கு பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது.

முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை இந்த பானம் தவிர்க்கிறது. கர்ப்பகாலத்தின் பொதுவான அறிகுறியான நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலை இளநீர் குறைக்கிறது.

இளநீரை எந்த நேரத்திலும் பருகலாம், குறிப்பாக காலை நேரத்தில் பருகுவது சிறந்தது. காலை வேளையில், உங்கள் வயிறு காலியாக இருக்கும் போது மின்னாற்பகுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படுவதால் இது ஆரோக்கியமானதாகும்.

கர்ப்பகாலத்தில் இளநீர் பருகுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:

கர்ப்பகாலத்தில், யூரிக் அமிலத்தின் அளவு உடலில் சீராக இருக்க வேண்டும். தேங்காய் நீர் ஒரு டையூரிடிக் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் கனிம இருப்பு ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு ஊக்குவிக்கிறது.

இதனால் சிறுநீர் பாதையில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகின்றன. இதனால் சிறுநீரக செயல்பாடுகள் மேம்படுகிறது,

மேலும், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்றுகள் உண்டாகாமல் தவிர்க்கப்படுகிறது. சிறுநீரக பாதையில் தொற்றுகள் உண்டாகாமல் தடுப்பதால், பிரசவ காலத்திற்கு முன்கூட்டியே குழந்தை பிறப்பது தவிர்க்கப்படுகிறது.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன.

இளநீரில் அதிகமாக உள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான மண்டலத்தை வலுவாக்கி, அஜீரணத்தைப் போக்குகிறது,

pH அளவை பராமரிக்கிறது மேலும், மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஆயுர்வேதம் இளநீரை ஒரு சிறந்த மலமிளக்கியாக கருதுகிறது.

உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. தேங்காய் நீர் ஒரு இயற்கையான அமில நடுநிலைப்படுத்தியாகும், எனவே நெஞ்செரிச்சல் தடுக்கப்படுகிறது.

இளநீர் பருகுவதால் உடலில் பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் லாரிக் அமிலம் ஆகியவற்றின் அளவு அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை எதிர்க்கிறது.

இளநீரில் உள்ள வைட்டமின்கள், அத்தியாவசிய புரதங்கள், மற்றும் எலக்ட்ரோலைட்டுகள், சர்க்கரை இரத்த அழுத்தம் போன்றவற்றின் அளவை கட்டுபடுத்துகிறது.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பிரசவ நேரம் நெருங்குவதைப் பற்றிய பயம் அதிகரிக்கும்போது, இரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே கடைசி மூன்று மாதங்களில், தினமும் இளநீரை ஒரு கிளாஸ் பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்