நாவல்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நாவற்பழம் பல நோய்களுக்கும் சரும பிரச்சினைகளுக்கும் அருமருந்தாகும்.

நாவல் பழத்தில் வேர் முதல் கொட்டை வரை அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது.

இருப்பினும் நாவல்பழத்தை அளவோடு சாப்பிடவேண்டும். அதிகமாக சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.

நாவற்பழத்தின் பயன்கள்
 • நாவல்பழக் கொட்டையை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, தண்ணீர் மற்றும் பாலில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.
 • நாவல் பழம் இயற்கையாகவே இரத்தத்தை சுத்திகரிக்கப் பயன்படுகிறது.
 • இதில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C அதிக அளவில் உள்ளதால் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
 • கண் பார்வையைத் தெளிவாக்கும்.
 • சிறுநீரகக் கற்களையும் இது இருந்த இடம் தெரியாமல் கரைத்துவிடும்.
 • நாவல் பழ கொட்டையின் பவுடர் உடன் பால் கலந்து தடவி வர முகப்பருவை போக்கும்.
 • இதன் சாறு நினைவாற்றலை அதிகரிக்கப் பயன்படுகிறது.
 • ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது
யார் சாப்பிடக்கூடாது?
 • அறுவை சிகிச்சைக்குப் போகும் நோயாளிகள் இந்த பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இல்லையேல் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். பிறகு லோ சுகராகிவிடும்.
 • வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
 • பால் சாப்பிடுவதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
 • இந்த பழத்தின் மூலம் ஏற்படும் கரை விரைவில் போகாததால் கவனமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின் பல் துலக்குவது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers