குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் எவை தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
107Shares
107Shares
ibctamil.com

குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டிருந்தால், நோய்த்தொற்றுகளால் எளிதில் அவர்களை தாக்கவிடும்.

இதனால் எளிதில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல் அசௌகரியங்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்புள்ளது.

ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் எவை என்று பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
  • வளரும் குழந்தைகளுக்கு தினசரி அல்லது வாரத்தில் 2 நாட்களாவது கீரை அளிக்க வேண்டும்.
  • உங்கள் குழந்தைகளின் தட்டில், கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற அடர் நிற காய்கறிகள், கேரட், மஞ்சள், மஞ்சள்பூசணி, பச்சை குடமிளகாய் மற்றும் பீன்ஸ், முட்டைகோஸ், காளான் போன்ற காய்கறிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
  • வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், மாதுளை, கொய்யா, வைட்டமின் சி நிறைந்த பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் இவற்றை அதிகளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.
  • பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற பருப்புகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி சீராக பெருகும்.
  • கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளை ஒன்றாய் சேர்த்து, பொடிசெய்து, கஞ்சி அல்லது ரொட்டியாக அல்லது தோசையாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
  • தினசரி குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் 2/4 பல் பூண்டு இருப்பது அவசியம்.
  • குழந்தைகளின் உணவில் அடிக்கடி மீன் சேர்ப்பது நல்லது.
  • வேகவைத்த முட்டை, எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு இது மிகவும் அவசியமானது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்