ஆண்களே இந்த உணவுகளை கட்டாயம் தவிருங்கள்

Report Print Arbin Arbin in ஆரோக்கியம்
446Shares
446Shares
ibctamil.com

ட்ரான்ஸ் கொழுப்புக்கள் ஆண்களின் நினைவாற்றலை மோசமாக பாதிப்பதோடு, உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ் கொழுப்புக்கள் என்பவை கெட்ட கொழுப்புக்களாகும். இந்த கொழுப்புக்கள் ஒருவரது உடலில் அதிகமானால், அது உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களை குறைக்கும்

உறைய வைக்கப்பட்ட கேக், பீஸ் மற்றும் குக்கீஸ் போன்ற உணவுப் பொருட்களில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் முழுமையாக நிறைந்துள்ளது.

பிரெஞ்சு ப்ரைஸில் ஆரோக்கியத்தை சீரழிக்கும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது உடல் பருமனை உண்டாக்குவதோடு, ஒருவரது உடல் எடையை அதிகரிக்கும்.

பட்டர் பாப்கார்னில் 0.5 கிராம் ட்ரான்ஸ் கொழுப்புக்களும், காராமெல் பாப்கார்னில் 1.5 கிராம் ட்ரான்ஸ் கொழுப்புக்களும் உள்ளது. எனவே இதை வாங்கும் முன் பல முறை யோசித்துக் கொள்ளுங்கள்.

மார்கரைன் க்ரீம் போன்று காணப்படுவதற்கு காரணம், அதில் ஹைட்ரஜன் நிறைந்த வெஜிடேபிள் ஆயில் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது தான். எனவே இந்த மார்கரைனை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

க்ரனோலா பார்களில் முழுமையாக ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. உங்களுக்கு க்ரனோலா பார்களை சாப்பிட விருப்பமாக இருந்தால், அதை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள்.

காபி க்ரீமரில் பாதி கிராம் ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்துள்ளது. இது இதய நோய், பக்க வாதம் மற்றும் சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

மாட்டிறைச்சியில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் இயற்கையாகவே அதிகம் நிறைந்துள்ளது. இந்த ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நல்லது தான். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்