நிர்வாணமாக உறங்கினால் உடை எடை குறையுமாம்! உங்களுக்கு தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
326Shares
326Shares
ibctamil.com

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், பல வழிகளிள் கடினமாக உழைத்து தங்கள் உடை எடையை குறைக்க முயற்சி செய்கின்றனர்.

தூக்கத்தின் மூலமே உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?

ஒருவரது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிப்பதற்கான சிறப்பான வழியாக தூக்கத்தைக் கூறுகிறார்கள்.

ஒருவர் தினமும் அதிகளவு தூக்கத்தை மேற்கொண்டாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இருட்டான அறையில் உறங்கவும்

வெளிச்சமின்றி இருட்டான அறையில் உறங்குவதனால் உடலில் மெலடோனின் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் எளிதில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

ஆழ்ந்த உறக்கத்தின் மூலம், கலோரிகளை எரிக்கும் ப்ரௌன் கொழுப்பு உற்பத்தி செய்யப்பட்டு இது எடையிழப்பிற்கு உதவிடும்.

மதுவைக் குறைக்கவும்

இரவு தூங்கும் முன்பு மதுவை குறைத்து ஒரு டம்ளர் ஒயின் நல்லது தான். ஆனால் தூங்குவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே குடித்துவிடுங்கள் இது உடற்பருமனை குறைக்க சிறந்த வழியாகும்.

அளவான இரவு உணவு

இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், குறைவாகவும், வேகமாகவும் சாப்பிடுங்கள்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்

இரவு நேரத்தில் தூங்கும் முன் டிவி, மொபைல் போன்றவற்றை 1 மணிநேரத்திற்கு முன்பே அணைத்து, அவற்றைப் பயன்படுத்துவதை தவிர்த்திடுவது நல்லது.

அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கவும்

தூங்கும் அறை குளிர்ச்சியுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவது அவசியம், ஏனெனில் ஒருவர் தூங்கும் அறை குளிர்ச்சியான வெப்பநிலையில் இருந்தால், கலோரிகள் அதிகமாக எரிக்கப்பட்டு உடல் எடையை குறைத்து விடுகின்றது.

பகல் வேளையில் சுறுசுறுப்பாக இருக்கவும்

இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற நினைத்தால், இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்த்து, பகல் நேரத்தில் செய்யுங்கள்.

மதிய உணவில் முழு தானியங்களை சேர்க்கவும்

மதிய வேளையில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுக்களை உண்பதன் மூலம், இரவு நேரத்தில நல்ல தூக்கத்தைப் பெறலாம்

குறிப்பாக மதிய வேளையில் முழு தானிய உணவுகளான பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை, ஓட்ஸ், முழு தானிய பிரட், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடுவதனால் தானியங்களில் இருந்து செரடோனின் பெறப்பட்டு, அது தூக்கத்தின் போது மெலடோனினாக மாற்றமடைய செய்யும். இதுவும் உடல் எடை குறைக்க உதவிடும்.

ஆடையின்றி உறங்கவும்

இரவில் தூங்கும் போது ஆடை அணியாமல் தூங்கினால் கலோரிகள் அதிகம் எரிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

உடலானது குளிர்ச்சியடைந்து, உடலில் நல்ல மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகரித்து, ஆற்றல் அதிகரித்து, அதிகப்படியாக கலோரிகள் எரிக்கப்படும். அதோடு இவ்வாறு தூங்குவதால் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.

குறிப்பாக ஆண்கள் இவ்வாறு தூங்கினால், உடலில் காற்றோட்டம் சிறப்பாக இருந்து, விந்தணுவின் தரமும் மேம்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்