இரண்டு நாட்கள் உணவு சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்ன ஆகும்?

Report Print Raju Raju in ஆரோக்கியம்
350Shares
350Shares
ibctamil.com

48 மணி நேரத்துக்கு மேல், அதாவது இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காண்போம்.

இரண்டு நாட்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால், தசைகளில் உள்ள கிளைக்கோஜனையும் (Glycogen),கல்லீரலில் உள்ள குளுக்கோசையும் (Glucose) நம் உடல் எடுத்துக்கொள்ளும்.

இவை குறைந்தால் அடுத்ததாக உடலில் உள்ள கொழுப்புகள் கரையத் தொடங்குவதோடு இறுதியில், செல்களில் உள்ள புரதத்தை நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இது மிகவும் அபாயகரமான நிலையாகும்.

இதன் காரணமாக உடல் பலவீனமடைவதுடன், தசைகளும், எலும்புகளும் வலுவிழக்கும்.

மேலும் குறைந்த ரத்த அழுத்தம் உண்டாவதோடு நாடித்துடிப்பு குறையும். அல்சர் பாதிப்பு ஏற்படும், முடி கொட்டும்.

இது 72 மணி நேரத்தைக் கடந்துவிட்டால் உடலில் ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்துவிடும்.

இதனால் முதலில் சிறுநீரகம், இதயம் ஆகியவையும் பாதிப்படைய ஆரம்பிக்கும். அடுத்ததாக, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழக்கத் தொடங்கி மரணத்தில் சென்று முடியும்.

இது பொதுவான கருத்து என்றாலும், உணவில்லாமல் எழுபது நாட்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாட்கள் உயிர்வாழலாம் என்பதை அவரின் உடல்நலம், உயரம், சுற்றுப்புறச்சூழல் ஆகியவை தான் தீர்மானிக்கிறது.

பி.எம்.ஐ 12 - 12.5 என்ற அளவில் இருப்பவர்கள் பட்டினியாக இருக்கவே கூடாது என்பது முக்கிய விடயமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்