உடல் சூட்டை தணிக்க இதை செய்திடுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

வெயிற்காலம் வந்தாலே உடலில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி விடுகின்றது.

முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, தோல் அலர்ஜி, உடல் எடை குறைதல் போன்றவை இதனால் ஏற்படும் நோய்கள்

கற்றாழை மோர் உடல் சூட்டிற்கு சிறந்த அருமருந்தாகும். இந்த மோரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • புளிக்காத தயிர் - அரை கப்
  • கற்றாழை - 4 சிறு துண்டுகள்
  • இஞ்சி - சிறு துண்டு
  • பெருங்காய தூள் - சிறிதளவு
  • கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு.
செய்முறை

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கற்றாழைத்துண்டுகளை நீரில் பத்து முறை நன்கு கழுவ வேண்டும். இல்லையென்றால் கசக்கும்.

மிக்ஸியில் இஞ்சித்துண்டை தூளாக்கிய பின் கற்றாழைத்துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தயிர், பெருங்காய தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைத்து அதில் பின்னர் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும்.

இதனை டம்ளரில் ஊற்றி அதில் கொத்துமல்லித் தழை போட்டு பருகவும்.

இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் சூடு படிப்படியாக குறையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers